ரேஷன் கார்டு வச்சிருக்க எல்லாருக்கும் ஒரு ஷாக் நியூஸ்..! இனி இவர்களுக்கு அரிசி-கோதுமை கிடையாதாம்!!

A shock news for everyone who has a ration card They will not get rice-wheat anymore full details here read it now

தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை மக்கள் குறைந்த விலையில் வாங்கி வருகின்றனர். மக்கள் இந்த நியாய விலை கடையில் பொருட்களை வாங்குவதற்கு மிக முக்கிய ஆவணமாக இருப்பது ரேஷன் கார்டு.

ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை போன்ற பல்வேறு முறைகேடுகள் அதிகரித்து வருவதாக மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர். இத்தகைய செயல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தையும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதற்கு முன் இதற்கான கால அவகாசம் மார்ச் 31 முதல் இருந்த நிலையில் தற்பொழுது ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. இந்த கால அவகாசம் முடிவதற்குள் மக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இணைக்காத ரேஷன் கார்டுக்கு ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து அரிசி, கோதுமை போன்ற எந்த அத்தியாவசிய பொருளும் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN