11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி… இனி வருசத்துக்கு 2 முறை பொதுத்தேர்வு..! மத்திய அரசின் புதிய அறிவிப்பு!!

முன்னதாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் 10 ஆம் வகுப்பு 500 மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்புக்கு 1200 மதிப்பெண்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், தற்பொழுது உள்ள புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில், 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 10 ஆம் வகுப்புக்கு 500 மதிபெங்களுக்கும், 11 ஆம் வகுப்புக்கு 600 மதிப்பெண்களுக்கும், 12 ஆம் வகுப்புக்கு 600 மதிப்பெண்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

A shocking news for the students of 11th and 12th class Public examination twice a year from now on Central government new notification read it

இந்நிலையில், மத்திய அரசு மீண்டும் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் தேர்வில் எந்த தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அந்த மதிப்பெண்ணை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழி பாடங்களை படிக்க வேண்டும். அதில் ஒரு மொழி இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : இன்னும் சில மணி நேரத்தில் இந்தியா படைக்கபோகும் புதிய சரித்திரம்..! முழு விவரங்களுடன்…