இத்தனை அரசு பள்ளிகளுக்கு சிறப்பு விருதா? அன்பில் மகேஷ்

Special Award for Government Schools - Anbil Mahesh-Award For Government Schools

தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் சிறப்பாக செயல்படும் பள்ளிகள் அதாவது கட்டிட அமைப்பு, ஆசிரியர்கள் கற்பித்தல், கணினி வழி கல்வி ஆகியவற்றை எந்த பள்ளி சிறப்பாக தருகிறதோ அந்த பள்ளிக்கு விருது வழங்கபப்டும்.

அந்த வகையில், இந்த ஆண்டு சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு தமிழக அரசு விருது வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி 38 மாவட்டங்களில் உள்ள 114 அரசு பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

இந்த விருதுகள் பள்ளியின் உள் கட்டமைப்பு, கணினி வழி கல்வி, ஆசிரியரின் கற்பித்தல் திறன் போன்றவற்றை அடிப்படை காரணிகளாக கொண்டு வழங்கப்படுகிறது. மேலும் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பள்ளிகளுக்கு விருதினை வழங்கி சிறப்பிக்கிறார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here