அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ்..! தொடங்கியாச்சி சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில் @ பிரதமர் மோடி

0
A super good news for those who often travel by train Chennai-Mysore Vande Bharat train launched @ PM Modi-Prime Minister Modi Launched Vande Bharat Train

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் என்ற ரயில் சேவையை இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை வந்தே பாரத்தின் 5 வது ரயில் சேவையாகும்.

இந்நிலையில். இந்த வந்தே பாரத்தின் 5 வது ரயில் சேவை சென்னையில் இருந்து மைசூர் வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த வந்தே பாரத் ரயில் புது டெல்லி, வாரணாசி, மும்பை, அகமதாபாத், குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது சென்னையில் இருந்து மைசூருக்கும் மைசூரிலிருந்து சென்னைக்கும் இயக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்வில் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் தவார்சந்த் கெலாட், பிரகலாத் ஜோஷி, அஸ்வினி வைஷ்னவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ரயில் சேவை புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் சென்னை, பெங்களூரு, மைசூரு வழித்தடங்களில் இயக்கப்படும்.

மேலும், வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகளும் அதில் மொத்தம் 1,128 இருக்கைகளும் உள்ளன. காலை 5.50 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில் பெங்களூர் ரயில் நிலையம் வழியாக 12:30 மணிக்கு மைசூரை சென்றடையும் எனவும் மீண்டும் மைசூரிலிருந்து சென்னைக்கு 1 மணிக்கு புறப்பட்டு இரவு 7:45 மணிக்கு சென்னை வந்தடையும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. சென்னையில் இருந்த மைசூரு செல்லும் வந்தே பாரத் ரயிலின் எண் 20607 மற்றும் மைசூரில் இருந்து சென்னை செல்லும் ரயிலின் எண் 20608 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here