ரூ.12 லட்சம் பரிசு பெற்ற தமிழர்..! யார் தெரியுமா? எதற்கு தெரியுமா?

A Tamilian who won a prize of Rs. 12 lakh Do you know who Do you know why Dont miss read it now

தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலோனோர் தங்களுடைய பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருக்கும் தொழில்நிறுவனத்தைத் தேடி படையெடுத்து வருகின்றனர். அதில் சிங்கப்பூரும் ஒன்றாக இருக்கிறது. இதனையடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான செல்வம் ஆறுமுகம் (வயது 42) என்பவர் சிங்கப்பூரில் இருக்கும் ஒரு தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் அவர் பணிபுரியும் சிங்கப்பூரின் தனியார் நிறுவனமானது, தங்கள் ஊழியருடன் சேர்ந்து கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டது. மேலும் “ஸ்குவிட் கேம்” வெப் சீரிஸில் உள்ளது போல் ஒரு விளையாட்டையும் நடத்த ஏற்பாடு செய்திருந்தது. அதனையடுத்து அந்நிகழ்ச்சியில் ஒரு விளையாட்டு அரங்கை ஏற்பாடு செய்து, அதின் நடுவே பணமூட்டை அடங்கிய ராட்சத பலூனை கட்டி தொங்கவிட்டு போட்டியை துவங்கினர். அதாவது, அந்த பலூனை சக ஊழியர்களுடன் போட்டியிட்டு யார் முதலில் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பணமூட்டை அடங்கிய பலூனை பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்தவரான, செல்வம் ஆறுமுகம் அந்த போட்டியில் கலந்து கொண்டு ராட்சத பலூனைக் கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட அவருக்கு, பரிசாக ரூ. 12,00,000 லட்சம் அளிக்கப்பட்டது. மேலும் இவர் அந்த நிறுவனத்தில் கடந்த 2007-ஆம் வருடம் முதல் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN