அதிரவைக்கும் உலக சாதனை படைத்த வீரர்..! குவியும் பாராட்டுகள்!!

A world record player who shakes the world Accumulating praises

கைகளை உபயோகப்படுத்தாமல் நீச்சல் அடிப்பதென்பது தேர்ந்த நீச்சல் வீரரால் கூட முடியாத காரியம் ஆகும். ஆனால் எகிப்து நாட்டின் வீரர் கையில் பூட்டப்பட்ட விலங்கோடு 11 கிலோமீட்டருக்கு மேல் நீந்தி சென்றுள்ளார்.

எகிப்து நாட்டை சேர்ந்த நீச்சல் வீரர் ஷேகப் அல்லாம்(Sehab Allam) என்பவர் கையில் விலங்கோடு அதிக தூரம் நீந்தி சென்று உலக சாதனை படைத்துள்ளார். இவர் 6 மணி நேரத்தில் 11.649 கி.மீ தூரம் நீந்தி சென்று உலக சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த நீச்சல் போட்டியானது அரேபிய நாட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஷேகப் என்பவர் கையில் விலங்கை பூட்டி கொண்டு நீந்தி உலக சாதனை படைத்துள்ளார். 6 மணி நேரத்தில் ஷேகப்பால் படைக்கப்பட்ட இச்சாதனை அசாத்தியமானது. இவரது சாதனை உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இதன் மூலம் மனித சக்தியால் முடியாதது ஒன்றுமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது என கின்னஸ் சாதனை அமைப்பு கூறியுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN