ஆவின் சொன்ன சூப்பர் நியூஸ்! என்னானு தெரியனுமா? இதோ விவரங்கள்…!

ஆவின் சொன்ன சூப்பர் நியூஸ்! என்னானு  தெரியனுமா? இதோ விவரங்கள்...!
ஆவின் சொன்ன சூப்பர் நியூஸ்! என்னானு தெரியனுமா? இதோ விவரங்கள்…!

ஆவின் நிறுவனம் தயாரித்த தீபாவளி இனிப்புகளின் ஆர்டர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20% அதிகரித்து உள்ளதாக பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ₹ 115 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் இந்த ஆண்டு ₹ 149 கோடிக்கு வழங்கப்பட்டு உள்ளன. மேலும் 36.24 கோடி மதிப்பிலான இனிப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள ஆவின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் பால் நிறுவனம் தலா ₹300 ₹500 மற்றும் ₹900 என்ற விலையில் மூன்று காம்போ பேக் இனிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் விற்பனை அதிகரிப்பானது ஆவின் நிறுவனம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.

தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது தேவை அதிகரித்து உள்ளதால் ஆவின் பால் இருப்பை அதிகரிக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளது. அதற்காக இரண்டு லட்சம் மாடுகளை வாங்க விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணி நடந்து வருகிறது. அதோடு ஏற்கனவே மூடப்பட்ட கூட்டுறவு சங்கங்களை மீண்டும் திறக்கவும் புதிய கூட்டுறவு சங்கங்களை திறக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் அமைச்சர்.

Also Read >> தீபாவளி பண்டிகைக்கு உங்க சொந்த ஊருக்கு போறீங்களா நீங்க? உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்! என்னானு உடனே பாருங்க…!

அதோடு ஆவின் பால் மற்றும் இனிப்பு பொருட்களின் விற்பனை விலை அதிகரிக்கப்படாது. ஆனால் கொள்முதல் விகிதங்களை அதிகரிப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பால் கொள்முதல் செய்வதற்காக ஆவின் விரைவில் மாற்றியமைக்கப்பட்ட ரிச்மண்ட் ஃபார்முலாவிற்கு மாறும். தற்போது இந்திய தரநிலைகள் பணியகத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இயங்கி வரும் நிறுவனம் விரைவில் இந்த புதிய முறையை கடைபிடிக்கும் என்றார் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

இதனால் ஆவின் பால் மற்றும் பலகாரம், இனிப்பு பொருட்களின் விற்பனை விலை அதிகரிக்கப்படாது என்று உறுதி அளித்தார். சமீபத்தில் பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை அதிகரிக்க மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்கள் அதில் கலந்து கொண்டனர். மேலும் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத், இ.ஆ.ப. அவர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வாரியாக பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை அதிகரிக்கவும், பால் மற்றும் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரித்தல், அனைத்து ஒன்றியங்கள் மற்றும் இணையத்திலுள்ள பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடு முந்தைய ஆய்வுக்கூட்டங்களில் வழங்கிய உத்தரவுகள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து மேலும் மேம்படுத்த அறிவுரை வழங்கினார்.

மேலும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக கறவைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் வசதிகளை மேம்படுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பால்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவின் நிறுவனத்தில் பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்வதற்காக 2,528 பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் ஊழியர்கள் அந்தந்த கிராமப்புற பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வருகின்றனர். இக்கருவூட்டல் ஊழியர்கள் மூலம் வருடத்திற்கு ஏறத்தாழ 16.50 இலட்சம் செயற்கை முறை கருவூட்டல்கள் பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு செய்யப்படுகிறது. இச்செயற்கை முறை கருவூட்டல் வசதிகளை வலுப்படுத்தும் நோக்கில் 19.06.2023 முதல் வேலூர், விழுப்புரம், மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள பயிற்சி நிலையங்களில் வழங்கப்பட்டு வருகிறது என்று பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.