உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.62 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தினார். டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் பல அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளார்.
எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், கடந்த வாரம் டுவிட்டர் நிறுவனத்தையும் கையகப்படுத்தினார். டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்னதாக டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரிகளை பணி நீக்கம் செய்ததை அடுத்து தற்பொழுது, டுவிட்டரின் இயக்குநர் குழுவையும் பணி நீக்கம் செய்துள்ளார்.
டுவிட்டரின் இயக்குநர் குழுவில் 9 பேர் பணியாற்றினார், இந்நிலையில் எலான் மஸ்க் இந்த 9 பேரையும் ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்தார். தற்பொழுது, டுவிட்டர் இயக்குநர் குழுவிலும் டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாகவும் தான் மட்டுமே இருப்பதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.