தமிழகத்தில் கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதங்களில் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் சுமார் 5,229 மாணவர்கள் துணைத்தேர்வு எழுதினார்கள்.
இதனையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி பயில அரசுக் கல்லூரிகளில் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கும் பாடப்பிரிவுகளில் சேர்த்துவிட அந்தந்தப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து உயர்கல்வி தொடர்பான விவரங்களை கூறியபின், மாணவன் விரும்பிய பாடப்பிரிவில் சேர்க்க அனைத்து அரசு பள்ளி தளமையாசிரியர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Also Read : பெண்களே நீங்களும் மாதம் ரூ.1000 வாங்கணுமா? இன்னும் 2 நாள்தான் இருக்கு..! சீக்கிரம் போங்க…
அதாவது, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விபரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விபரங்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.