அமேசான் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..! இவ்வளவு பேர் பணி நீக்கமா?

0
Action taken by Amazon So many people fired-Amazon Company Employee Layoffs

மிகவும் பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கினார். அதன்பின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 500 பேர் பணியாற்றிய நிலையில் அதில் 50 சதவீதம் பேர் அதாவது 4 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தனர்.

இதனை தொடர்ந்து, மெட்டா நிறுவனத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனமும் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்தது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் அதவாது 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

இந்நிலையில், தற்பொழுது அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் அமேசான் நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தில் சுமார் 16 லட்சம் பேர் பணிபுரிந்து வரும் நிலையில், பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 3 சதவீதம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த ஆண்டில் பொருட்களின் விலை ஏற்றத்தால் நுகர்வோரின் வாங்கும் திறன் குறைந்துள்ளதாக அமேசான் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த வருவாய் இழப்பின் காரணமாகதான் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக அந்த செய்தி தாளில் கூறப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் சில பதவிகள் வேண்டாம் என்றும் அந்த குறிப்பிட்ட பொறுப்புகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நிறுவத்துக்குள்ளே வேறு துறைகளுக்கு(காலி இடங்கள் இருப்பின்) விண்ணப்பித்து இடம் மாறிக் கொள்ளலாம் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here