நடிகர் அஜித் நடித்த வெளியான துணிவு படத்தின் திரைவிமர்சனம்!

Actor Ajith starrer Thunivu film review-Thunivu Movie Review

நடிகர் அஜித் நடித்த இன்று வெளியாகி இருக்கும் படம் துணிவு. இந்த படத்தினை எச்.வினோத் – போனிகபூர் கூட்டணியில் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகியவை பெரிய அளவில் ஹிட் அடித்த நிலையில், துணிவு படமும் அந்த அளவிற்கு ஹிட் அடிக்கும் என்று ரசிகர்காளால் எதிர்பார்க்கப்பட்டது.

துணிவு படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி ஜான் கோக்கென், அஜய், தர்ஷன், சிபி சக்கரவர்த்தி, அமீர், பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், பால சரவணன், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு ஆக்சன் நிறைந்த மக்களுக்கு தேவையான கருத்துகளை கூறுவதாகவும் இந்த படம் இருக்கிறது.

இந்த படம் முழுக்க பேங்க்கில் மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள்? மக்கள் தங்களுடைய பணத்தை எவ்வாறு பாதுகாப்பார்கள் ? மக்கள் பணம் எப்படி சுரண்டப்படுகிறார்கள்? இதனை தெரிந்து கொண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்களா? போன்றவை இந்த கதையின் மூலம் தெளிவாக மக்களுக்கு எடுத்து கூறுகின்றனர். பெரும்பாலான படங்களில் ஹீரோ உடன் நடிக்கும் நாயகிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் தற்பொழுது அஜித் நடிக்கும் படங்களுக்கு அவருடன் நடிக்கும் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திலும் நாயகியாக நடிக்கும் மஞ்சு வாரியர் காட்சிகள் அதிலும் முக்கியமாக ஆக்சன் காட்சிகளில் போன்ற பல இடங்களில் கைத்தட்டல்களை பெற்றது.

முதல் பாதியில் விறுவிறுப்புடன் கொண்டுபோனாலும் இறுதியில் வரும் சண்டை காட்சிகள் சற்று நீளமாக உள்ளது ஆனால் அதையும் அஜித் ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள். இந்த படத்தில் பேங்க் ஒன்று கொள்ளையடிக்கப்படுகிறது. இதில் கொள்ளையடிக்கப்பட்ட பேங்க் மற்றும் அங்குள்ள மக்களை காப்பாற்றுவராக சமுத்திரக்கனி இருக்கிறார். இறுதியில் அங்குள்ள மக்கள் மீட்க பட்டார்களா என்பதுதான் இந்த படத்தின் கதை.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here