நடிகர் கமல்ஹாசன் X தளத்தில் உருக்கமான பதிவு – CINEMA NEWS IN TAMIL

Actor Kamal Haasan post on X - CINEMA NEWS IN TAMIL
Actor Kamal Haasan post on X – CINEMA NEWS IN TAMIL

நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசனுக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக நன்றியை கூறி உள்ளார் நடிகர் கமல்.

இந்திய சினிமாவில் மிக முக்கிய பங்கை வகிப்பவர் நடிகர் கமல். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் குரூப் டான்ஸர், உதவி நடன இயக்குனர், வசனகர்த்தா, கதை – திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் போன்ற அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து உள்ளார்.

ALSO READ : நடிகர் கார்த்தியின் ‘ஜப்பான்’ பட பாடல் வெளியீடு!

இவர் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அதோடு அவரது திரையுலக நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து அசத்தினார். அதில் அமீர்கான், சிவராஜ்குமார், சூர்யா உட்பட பலர் கலந்து கொண்டு நடிகர் கமல்ஹாசனை வாழ்த்தினர். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனை தொடர்ந்து பிறந்த நாளுக்கு வாழ்த்தியவர்களுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் “எத்தனையெத்தனை இதயங்கள்… அத்தனையும் நான் உறையும் இல்லங்கள். என் பிறந்த நாளில் என்னை வாழ்த்திய கலைஞர்கள் தலைவர்கள் நண்பர்கள் மய்ய உறவுகள் என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது. என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் இந்த உருக்கமான பதிவு ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்