Home NEWS நடிகர் கமல்ஹாசனுக்கு மீண்டும் இரண்டு நாட்களுக்கு ஓய்வு..! மருத்துவர்கள் தகவல்!

நடிகர் கமல்ஹாசனுக்கு மீண்டும் இரண்டு நாட்களுக்கு ஓய்வு..! மருத்துவர்கள் தகவல்!

0
Actor Kamal Haasan rested for two days again Doctors information-Kamal Haasan Return To Home After Treatment

உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாத்துறை மற்றும் அரசியல் துறைகளில் ஒரே நேரத்தில் இருத்துறைகளில் மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு சகலகலாவல்லவன் இவர் சகல கலைகளையும் கற்று அதனை திரைப்படத்தில் வெளிகாட்டுவார்.

இந்நிலையில், கமல்ஹாசன் தற்பொழுது இந்தியன்-2 படத்திலும், தனியார் தொலைகாட்சி ஒன்றில் தொகுப்பாளராகவும் மற்றும் அரசியல் கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று முன் தினம் மதியம் சென்னை திரும்பினார்.

இந்த சூழ்நிலையில், கமல்ஹாசன் தொடர்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் விளைவாக நேற்று முன் தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர், சென்னை போரூரில் இருக்கும் ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது. எனினும், சிகிச்சைக்கு பின் ஓரிரு தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர் வீடு திரும்புவார் எனவும், அதில் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை இருந்த கமல்ஹாசன் பூரண குணமடைந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர்கள் கமல்ஹாசனை மேலும் இரண்டு நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினர்.

RECENT POSTS

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here