
நடிகர் கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தின் ‘டச்சிங் டச்சிங்’ வீடியோ பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 25 ஆவது திரைப்படமாக நடித்து இருக்கும் படம் தான் ஜப்பான். இந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து உள்ளார். அதோடு அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்து உள்ளார். மேலும் அனு இமானுவேல் ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதை தொடர்ந்து ஒளிப்பதிவாளரும், இயக்குனருமானா விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். மேலும் வாகை சந்திரசேகர் மற்றும் பவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இப்படத்தை தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக குக்கூ ஜோக்கர் & ஜிப்ஸி போன்ற சிறந்த படைப்புகளை வழங்கிய இயக்குனர் ராஜூமுருகன் இயக்கி உள்ளார். அதோடு டிரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து உள்ளது.
ALSO READ : தீபாவளி 2023 : மூன்று நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை!
மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. தீபாவளி வெளியீடாக வருகிற நவம்பர் 10 ஆம் தேதி உலகம் எங்கும் பிரம்மாண்டமாக ஜப்பான் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது ஜப்பான் திரைப்படத்தின் ‘டச்சிங் டச்சிங்’ வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை அருண் ராஜா காமராஜ் எழுதி உள்ளார். அதோடு இந்த பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து உள்ளார். மேலும் இந்த பாடலை நடிகர் கார்த்தி பாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜப்பான் படத்தின் ‘டச்சிங் டச்சிங்’ வீடியோ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.