நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் வளர்த்த 2 கிளிகள் பறிமுதல்..! என்ன காரணம்?

Actor Robo Shankar 2 parrots raised at home confiscated-2 Parrots Grown

தனுஷ் நடித்து வெளியான “மாரி” படத்திலும், அஜித் நடித்து வெளியான “விஸ்வாசம்” போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக வளம் வருபவர் ரோபோ சங்கர். இவர் முதலில் சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக அடையாளம் பெற்றவர். இவர் தன் குடும்பத்துடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பல்வேறு செல்லப்பிராணிகளை வளர்த்து வரும் ரோபோசங்கர், பறவைகளையும் வளர்த்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றில் அவரது வீட்டில் வளர்க்கப்படும் அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளின் வீடியோ ஒன்றும் வெளியானது.

இதையடுத்து அவரது வீட்டுக்கு சோதனை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வரும் கிளிகளை பறிமுதல் செய்து கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைந்தனர். வனத்துறை சட்டத்தின்படி பறவைகள் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனுமதியின்றி வளர்த்ததால் கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வகையான கிளிகள் வீட்டில் வளர்க்க கூடாது என்பதாலும் மேலும், வனத்துறை அனுமதி இல்லாமல் கிளையை வளர்த்ததாலும் அந்த கிளிகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரோபோ சங்கரிடம் விசாரணை நடத்த வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here