
நடிகர் விஜய் நடித்த லியோ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. மேலும் அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அறிவிக்கப்பட்டு அதற்கு வெற்றிவிழாவும் தற்போது நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 68 ஆவது படத்தில் கவனம் செலுத்து வருகிறார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த படத்தை கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்து உள்ளார். மேலும் 20 வருடத்திற்கு பிறகு விஜய் யுவன் கூட்டணி இணைய உள்ளது. விஜயின் புதிய கீதை படத்திற்கு யுவன் இசையமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ : லால் சலாம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட படக்குழு!
அதோடு இந்த படத்தின் பூஜை விஜயதசமி அன்று நடத்தப்பட்டது. இந்த வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டது. மேலும் இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். அதோடு இந்த படத்தின் பாடலாசிரியராக மதன் கார்க்கி இணைந்து உள்ளார்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது முடிவடைந்தது. அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்க்காக படக்குழுவினர் கடந்த 31 ஆம் தேதி அன்று தாய்லாந்து நாட்டிற்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் லியோ படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றதால் படப்பிடிப்பிற்காக விஜய் தாய்லாந்து செல்லவில்லை, படக்குழு மட்டும் அங்கு சென்றது. மேலும் வெற்றி விழா முடிவடைந்த நிலையில் இன்று காலை ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து புறப்பட்டார்.