சூரியனை நோக்கிய பயணத்தை தொடங்கிய ஆதித்யா எல் 1..! கைதட்டி மகிழ்ச்சியை வெளிபடுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள்!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 என்ற விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தினர். இந்த சந்திராயன் 3 விண்கலமானது பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதையை முடித்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறக்கபட்டது. சந்திராயன் 3 விண்கலத்தில் இருக்கும் ரோவரானது தற்பொழுது நிலவை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

Aditya L 1 started his journey towards the sun ISRO scientists expressed happiness by clapping see here

இந்நிலையில், சந்திராயன் 3 வெற்றிக்கு பின்னர் நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை தயார் செய்தது இஸ்ரோ. சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் அனுப்படும் முதல் விண்கலமாக ஆதித்யா எல் 1 உள்ளது.

Also Read : இனிமே எல்லா கடைக்கும் தமிழ்லதான் பெயர் பலகை வைக்கணுமாம்..! இல்லைனா ரூ.2 ஆயிரம் அபராதமாம்! சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு!!

இதையடுத்து, சூரியனை ஆய்வு செய்யவுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் இன்று காலை சரியாக 11. 50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு தனது பயணத்தை தொடங்கியதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கைகளை தட்டி கொண்டாடினர்.