சென்னை, ஆகஸ்ட் 24
அரசு வரைவு பேருந்துகளை இயக்குவதற்காக 400 ஓட்டுனர்களை தனியார் நிறுவனங்கள் மூலம் பணியமர்த்த விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்த அறிவிப்பில்,
அரசு விரைவு பேருந்துகளை இயக்குவதற்கு கனரக போக்குவரத்து வாகன உரிமை வைத்துள்ள ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த விரும்பும் அரசுக்குச் சொந்தமான அல்லது அரசு அங்கீகரித்த தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான ஒப்பந்த படிவம், சென்னை, பல்லவன் சாலையில் உள்ள விரைவு போக்குவரத்துக் கழக துணை மேலாளரிடம் (உபகரணங்கள்) செப்டம்பர் 12 தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.
இதையடுத்து செப்டம்பர் 13ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் சார்பில் சென்னையில் மட்டும் 120 ஓட்டுநர்களை பணியமர்த்த வேண்டும். குறைந்தபட்சமாக காரைக்குடியில் 10 ஓட்டுநர்கள் என 12 பணிமனைகளில் மொத்தம் 400 ஓட்டுநர்களை பணியமர்த்த வேண்டும். அவர்கள் அனைவரும் 24 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும், கிளை மேலாளர் வழங்கும் பணிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப் பட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளன.
RECENT POSTS:
- Tamil Nadu Police Department Recruitment 2023 – Walk in Interview | Salary Rs.15700 – 50000/- PM || Download Application Form Here…
- இந்தியா முழுவதும் 138 வேலை வாய்ப்புகள்! மத்திய அரசின் புது அறிவிப்பு வந்துள்ளது! Apply Online Here!
- இந்தியாவின் எந்த இடத்திலும் வேலை செய்யலாம்! 69 பணிகளை UPSC வெளியிட்டுள்ளது! Apply Online Here!
- IIT மெட்ராஸில் சூப்பரான வேலை! மாதம் ரூ.40000 முதல் ரூ.60000 வரை சம்பளம் வழங்கப்படும் @ www.iitm.ac.in
- திருப்பதி செல்லும் பக்தர்களா நீங்க.. இதோ உங்களுக்காக சூப்பர் குட் நியூஸ்..!