நடப்பு ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியது. இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோத உள்ளனர். முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் கலந்து கொண்டனர். இதில், பாகிஸ்தான் அணி அபார வெற்றியை கைப்பற்றியது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றது.
இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான மூன்றாவது போட்டியானது இன்று(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டியானது இலங்கையில் உள்ள பல்லகெலே மைதானத்தில் இன்று மாலை 3 மணியளவில் தொடங்க உள்ளது.
இதையடுத்து, கடந்த 2019 ஜூன் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் இந்திய அணி வெற்றி கண்டு இருந்தது. இதனை தொடர்ந்து 4 ஆண்டுகள் கழித்து இந்தியா Vs பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.