ஜி20 மாநாட்டை முன்னிட்டு… நாளை மறுநாள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்!

Today News in Tamilnadu

Today News in Tamilnadu

வருகிற ஆகஸ்ட் மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஜி-20 மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்க்கான முன்னேற்ப்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

Also Read>> அரசின் அனுமதி இல்லாத வரைபடங்களில் இருக்குற பகுதிகளில்… இனி இந்த திட்டம் கிடையாதாம்…! அதிரடி உத்தரவு!

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி சென்று, நாளை மறுநாள் (சனிக்கிழமை) அன்று, குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க போவதாக தகவல் வந்துள்ளது. மேலும் திரெளபதி முர்மு வழங்கும் இரவு நேர விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்கள் மற்றும் உள்நாட்டு தலைவர்களோடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்பதாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வாங்குவது குறித்து குடியரசு தலைவரிடம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.