அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் முறையில் வேலை அறிவிப்பு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வக உதவியாளர் வேலை
அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வக உதவியாளர் வேலை

Alagappa University -அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய ஆசைப்படுபவர்கள் 22 டிசம்பர் 2023 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் சீக்கிரம் கலந்து கொள்ளுங்கள். ஒரே ஒரு ஆய்வக உதவியாளர் (Lab Assistant) பணியிடம் மட்டும் உள்ளதால் விரைந்து நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள். கல்வித்தகுதியாக M.Sc, ME/M.Tech படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.18,520 ஊதியம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வேலை பார்க்கலாம்.

ALSO READ : மாதம் ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும்! வந்தாச்சி ரயில்வேயில் வேலை! மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!

வயது வரம்பு பற்றிய விவரம் எதும் குறிப்பிடப்படவில்லை. முதலில் எழுத்துத் தேர்வு முடிக்க வேண்டும். இரண்டாம் தேர்வு முறை நேர்காணல் முறையில் நடைபெறும். அப்ளிகேஷன் பீஸ் எதுவும் கிடையாது. Department of Biotechnology, Alagappa University, Science Campus, Karaikudi-630003 என்ற முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்.

மேற்கண்ட வேலைவாய்ப்பில் கொடுக்கப்பட்ட விவரங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification மூலம் தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top