
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வருகிற 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி முன்னிட்டு பெரும்பாலான கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி எழுமலையான் கோவிலிலும் நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் எழுமலையான அலங்கரிக்கப்பதற்கான சகஸ்ர தீப அலங்கார சேவை மட்டுமே நடைபெறும்.
எனவே, நவம்பர் 12 ஆம் தேதி திருப்பதி கோவிலில் அனைத்து கட்டண சேவைகளையும் கோவில் நிர்வாகம் ரத்து செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 7 மணியளவில் திருப்பதி எழுமலையான் கோவிலின் உள்ளே தங்கவாசல் அருகே தீபாவளி ஆஸ்தானம் (தர்பார்) நடைபெறும்.
ALSO READ : SBI பேங்க்ல வேலை செய்ய விருப்பமா? இந்தியா முழுவதும் வேலை செய்ய ஆட்கள் வேணுமாம் பாரத ஸ்டேட் வங்கிக்கு..!
இந்த தீபாவளி ஆஸ்தானம் நடைபெறுவதையொட்டி, உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருக்கும் தங்கவாசல் எதிரே உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் எழுந்தருள்வார். இதனுடன் ஏழுமலையானின் சேனாதிபதியும் அங்கு எழுந்தருள்வார். இதனை தொடர்ந்து உற்சவர்களுக்கான சிறப்பு பூஜைகளுடன் சேர்த்து ஆஸ்தானமும் நடைபெறும். திருப்பதி கோவிலில் நடைபெறும் இந்த தீபாவளி ஆஸ்தானம் காரணமாக அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.