இந்த பணிகளையெல்லாம் விரைந்து முடிக்க வேண்டும் – சேலத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

All these works should be completed quickly - Salem Chief Minister M.K. Stalin-CM MK Stalin 2nd Day In Salem

கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சியாக வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் 2-ம் கட்டமாக சேலம் மண்டலத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இரண்டாவது நாளான இன்றும் முதலமைச்சர் நேரடி கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கள ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து முதலமைச்சர் கூறுகையில், “கிராமப்புற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். மக்களின் மனுக்களை காகிதங்களாக பார்க்காமல் அவர்களின் வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும். விவசாயிகளின் வருமானம் உயர்த்தப்பட வேண்டும் என்பது அரசின் இலக்கு. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here