
ஆவின் நிறுவனமானது தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகிறது. இந்த ஆவின் நிறுவனத்தில் இருந்து ஒரு நாளைக்கு சராசரியாக 30 லட்சம் லிட்டர் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் மக்கள் அனைவருக்கும் எளிமையாக கிடைக்க கூடிய வகையில் சில்லறை விற்பனை நிலையங்களை அந்தத்த இடடத்தில் வைத்து விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் எண்ணற்ற மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் ஆவின் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதியதாக ஆவின் பாலகம் அமைக்க திட்டமிட்டுள்ளது ஆவின் நிறுவனம். ஆவின் பாலகம் வைத்து விற்பனை செய்ய விரும்பமும், ஆர்வமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பாலகம் அமைக்க வேண்டும் என்றால், 1.5 லட்சம் முதல் 6 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். 30000 ரூபாய் மதிப்பு தொகையாக ஆவின் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சம் வரை விற்பனை செய்ய வாய்ப்புகள் உண்டு. ஆர்வமுள்ள மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மிஸ் பண்ணிடாம மற்றவர்களுக்கும் ஷேர் செய்து உதவுங்கள்.