அம்மாடியோவ்! 20 ஆயிரம் விநாயகர் சிலைகள் கண்காட்சி… அழகாய், அற்புதமாய் விநாயகர் சதுர்த்தியின் ஸ்பெஷல்!

நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வினைகளை தீர்க்கும் விநாயகருக்கு இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், சென்னை தாம்பரம் சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எண்ணற்ற விநாயகர் சிலைகளுடன் சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் சுமார் 20000 (இருபதாயிரம்) விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியானது இன்று முதல் 12 நாட்கள் நடைபெறப் போகிறது. ஒரே இடத்தில் காணப்படும் ஏராளமான விநாயகர் சிலைகளை காண பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்துகொண்டே இருக்கின்றனர்.

கண்களுக்கு விருந்தளிக்க கூடிய வண்ண வண்ண விநாயகர் சிலைகளை காண நீங்களும் செல்லலாமே..!

SOURCE LINK


பொறுப்பு துறப்பு:

மேலே கொடுப்பட்டுள்ள தகவல்கள் அல்லது செய்திகள் எங்களுடைய ஜாப்ஸ் தமிழ் குழுவினரால், அதன் உண்மை தன்மையை நன்கு ஆராயப்பட்டு பதிவிடப்படுகிறது. வெளியிடப்படும் படைப்புகள் அனைத்தும் வாசகர்களின் புரிதல், பயன்பாட்டிற்காக மட்டுமே. மற்றவர்களுடைய அறிவுசார் குறியீட்டுகளை மீறும் (Copyright Violation) நோக்கம் இல்லை. எனவே, நாங்கள் எந்த விதமான காப்புரிமையும் கோரவில்லை. தகவல் அனைத்தும் Fair Use Policy அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு அதன் மூல இணைப்பை (Source Link) கொடுத்துள்ளோம். இருப்பினும், உங்களுக்கு ஜாப்ஸ் தமிழ் இணையதளத்தின் செய்திகள், கட்டுரைகள், வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் படங்களின் மீது ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் [email protected] என்ற முகவரிக்கு இமெயில் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here