அம்மாடியோவ்… இரவில் தெரியும் நிலாவா இது! டுவிட்டரில் வெளியான மாஸ் வீடியோ..!

Ammadiov Is this the moon that can be seen at night Mass video released on Twitter just now read it fast

அமெரிக்காவில் அண்ட்ரூ மெக்கார்தி என்பவர் நிலாவினுடைய மிகத்துல்லிய புகைப்படத்தை படம் பிடித்திருக்கிறார். இத் தகவலை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமல்லாது அப்புகைப்படத்தை வெளியிட்டும் இருக்கிறார். அண்ட்ரூ மெக்கார்தி அமெரிக்காவின் வானியல் ஆய்வாளரும் வானியல் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தெளிவுடன் நிலவின் மேற்பரப்பானது படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான தனி புகைப்படங்கள் மற்றும் இரு தொலைநோக்கிகளையும் இப்புகைப்படத்தினை எடுப்பதற்காக பயன்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது தொடர்ந்து 2 வாரங்களாக நிலவின் அதிக துல்லியத்தைப் பெறுவதற்காக பணியாற்றியுமிருக்கிறார்.

மேலும் ஒரு ஜிகா பிக்சல் அளவுடன் இப்புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. அதே துல்லியத்துடன் இதனை பதிவிறக்கப்படும் போது கணிணியின் செயல்வேகமானது குறைய வாய்ப்பிருக்கிறது.

மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் அண்ட்ரூ மெக்கார்தி தனது இன்ஸ்டாகிராமிலும் ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் எவ்வாறு புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதற்கான ஒரு வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN