கூடுதலாக 11 ஆயிரம் ஊழியர்களா? அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

An additional 11 thousand employees Announcement by Minister Senthilbalaji-Appointment To 11 Thousand Electrical Staff

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பருவமழை முன்னெச்சரிக்கையாக 11 ஆயிரம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

பருவமழை குறித்து மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 44 மின்பகிர்மான வட்டங்களில் 760 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 15-20 ஊழியர்கள் உள்ள நிலையில், மின்விநியோகம் தடையில்லாமல் நடக்கஇக்குழுவினர் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, பகல் நேரத்தில் 6,540 பேர், இரவு நேரத்தில்2,400 பேர் என கூடுதலாக ஆட்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மக்களின் புகார்களை கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவசதியாக மின்னகத்தில் கூடுதலாக 15 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், ஊழியர்கள் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 5 மண்டலங்களில் பூமிக்கு அடியில் கேபிள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி வரும் டிசம்பருக்குள் முடிக்கப்படும்.இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்குவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here