திருவண்ணாமலை தீபத் திருவிழாக்கு போறவங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! இது இருந்தாதான் கோவிலுக்கு போக முடியும்! டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

an important announcement for thiruvannamalai deepa festival goers you can go to the temple only if you have this dgp sailendra babu orders tiruvannamalai deepa festival

தீப திருவிழாவை காண இந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பார் கோடுடன் கூடிய பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆண்டுதோறும் ஆண்டுதோறும் நடைபெறும் தீப ஒளி திருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதால் லட்சகணக்கான மக்கள் இந்த தீப ஒளியை காண வருவதால் அவர்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு வழங்கப்படும் என்று டிஜிபி கூருனார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, வருகிற டிசம்பர் 6ஆம் தேதி தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக அதிக அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் தற்பொழுது கொரோனா பரவல் குறைந்து தளர்வுகள் அகற்றப்பட்டதால் அதிக எண்ணிக்கையில் அதாவது சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். பக்தர்கள் எந்த வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 12 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாஸ் வழங்கப்படும். பார் கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்படும். அந்த பாஸை சோதனை செய்துதான் கோவிலுக்குள் அனுப்புவோம். போலி பாஸ் வைத்து கோவிலுக்குள் நுழைய முடியாது என்றும் சைலேந்திரபாபு தெரிவித்தார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here