தமிழக மாணவர்களுக்கு பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

An important announcement issued by the Department of School Education for the students of Tamil Nadu

தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

மேலும், 1முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21-ம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். தமிழகத்தில் பள்ளி கடைசி வேலை நாள் ஏப்ரல் 28 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN