சற்றுமுன் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! இனி இதற்கு கட்டணம் கிடையாது!!

An important announcement released by the Tamil Nadu Electricity Board recently No more fees

நம் அன்றாட வாழ்க்கையின் சிறு சிறு பணிகளுக்கும் கூட நாம் மின்சாரத்தைதான் பயன்படுத்தி வருகிறோம். அந்த அளவிற்கு மின்சாரம் நம் வாழ்வில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.

இந்நிலையில், ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தும் மின்சாரத்தை துல்லியமாக அளவிட “ஸ்மார்ட் மீட்டர்” பொருத்தப்படும் என்று மின்வாரியம் தெரிவித்தது. இந்த ஸ்மார்ட் மீட்டரில் மின் பயன்பாடு தேதி மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும். பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக ‘சர்வர்’ உடன் இணைக்கப்படும். இதன் மூலம் தானாகாவே நாம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியுள்ளோம் என்று கணக்கெடுத்துவிடும். இதற்கான கட்டண விவரம் தானாகவே நுகர்வோரின் கைபேசிக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.

இதையடுத்து, வீடுகளில் பொருத்தப்பட உள்ள “ஸ்மார்ட் மீட்டர்களுக்கு” நுகர்வோரிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கான முதல் கட்ட சோதனை முயற்சியாக சென்னை தி. நகரில் 1 லட்சத்து 42 ஆயிரம் மின் இணைப்புகளில் “ஸ்மார்ட் மீட்டர்” பொருத்தப்பட்டு மின் கணக்கீடு எடுக்கப்பட்டு வருகிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN