அரசு கேபிள் டி.வி வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு..! உடனே பாருங்க!

0
Tamil Nadu government's important announcement for those who have government cable TV Watch now-Government Cable Tv Service Resumed

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு மென்பொருள் (சாப்ட்வேர்) சேவைகளை பிரபல தனியார் நிறுவனம் ஒன்று வழங்கி வந்தது. அந்த நிறுவனம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மென்பொருள் சேவையை நிறுத்தியது. இதனால் கேபிள் டி.வி. நிறுவனம் சேவையில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது. சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேனல்களை பார்க்க முடியாமல் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். பாதிப்புகளை உடனடியாக சரி செய்வதற்காக தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தனியார் நிறுவனம் எந்தவொறு அறிவிப்பும் இன்றி மென்பொருள் சேவையை நிறுத்தியதால் கேபிள் டி.வி நிறுவனத்தின் சேவை கடந்த இரண்டு நாட்களாக பாதித்துள்ளது. இந்நிலையில் பல இடங்களில் கேபிள் டி.வி செயல்படாததால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, கேபிள் டி.வி சிக்னல் சரிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி கேபிள் டி.வி நிறுவனம் இந்த சிக்னலை சரிசெய்தது. இதனால் அனைத்து இடங்களிலும் இனி தடையின்றி வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here