சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு ஒரு முக்கிய தகவல்…! கேரள சுகாதாரத்துறையின் எச்சரிக்கை!

0
An Important Information for Sabarimala Ayyappan Devotees Warning of Kerala Health Department-Kerala Health Department Warns Sabarimalai Devotees

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதங்களில் 41 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும். இந்த மண்டல பூஜைகள் தற்பொழுது தொடங்கப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐயப்பன் கோவிலில் 41 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையானது கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கியது. அடித்த மாதம் 27 ஆம் தேதி வரை இந்த மண்டல பூஜை நடைபெறும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நடைபெறும் மண்டல பூஜைக்காக சபரிமலையில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர். கடந்த நவம்பர் 17 ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டதிலிருந்து நாளுக்கு நாள் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலையில் மண்டல பூஜையின் காரணமாக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். இதற்கான அடிப்படை வசதிகளும் கோவில் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசு செய்து வருகிறது. இதற்காக சபரிமலையில் பாதுகாப்பில் இருந்த 5 போலீசாருக்கு சின்னம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் இந்த சின்னம்மை நோய் மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க கேரள சுகாதாரத்துறை சபரிமலை வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here