நீட் தேர்வு குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கம்

Anbumani Ramadoss explains about NEET exam-NEET Exam Coaching For Anbumani Ramadoss

மருத்துவ படிப்புகளுக்காக நீட் தேர்வு முறை நடத்தப்படுகிறது. நீட் தேர்வு முறை கிராமபுறங்களிள் பயிலும் மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான கனவை பெரிதும் பாதித்துள்ளது. இது குறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. பா.ம.க இந்த நீட் தேர்வு முறையை கடுமையாக எதிர்க்கிறது.

பா.ம.க இந்த நீட் தேர்வு முறையிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்பதை முற்றிலும் ஆதரிக்கிறது. இந்த நீட் தேர்வு முறையை முற்றிலும் நீக்கும் வரை அதை எதிர்த்துக்கொண்டுதான் இருப்போம் என்று கூறினார். நீட் தேர்வு முறை கிராமபுறங்களிள் பயிலும் மாணவர்களின் கனவை பாதிதுள்ளதை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்பொழுது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கைக்காக 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு குறைந்தது 500 இடங்கள் கிடைத்து விடும் என்பதாலேயே ரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு நடப்பாண்டில் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் அதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை என்றும் தெரிவித்த அன்புமணி, உடனே அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை தொடங்க வேண்டும் என்று அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here