தேர்வுகள் ஒத்திவைப்பு: அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Anna Madras University Exams Postponed Dued to Rain
இன்று நடைபெறுவதாக இருந்த அண்ணா பல்கலைக்கழகம், Anna Univ வளாகத்தின் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, கட்டிட வடிவமைப்பு மற்றும் திட்ட கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி வளாகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக இறுதித் தேர்வுகள் ஆகிய கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த பல்கலை. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. Anna & Madras University Exams Postponed Dued to Rain
தேர்வுகள் ஒத்திவைப்பு: அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது
சென்னையில் கடந்த இரு நாட்களாகவே கடுமையான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் பெய்த கனமழையைத் தொடர்ந்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 150க்கும் அதிகமான கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சில கல்லூரிகளும் அடக்கம்.
இன்று இந்தியா முழுவதும் 02 டிசம்பர் 2019 தேசிய மாசு கட்டுப்பாட்டு நாள்
அதேபோல, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இணைவு பெற்ற கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த பல்கலை. இறுதித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவிகள் கல்லூரிக்கு வந்து செல்வதில் இருக்கும் சிரமத்தை தவிர்ப்பதற்காக பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளார்.
இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வேறு ஒரு நாளில் நடைபெறும். அந்த தேர்வு நாள், பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Anna Madras University Exams Postponed Due to Rain
Whatsapp – https://chat.whatsapp.com/J2VMRRUItr3LpoEagq3MFR
Facebook – https://www.facebook.com/jobstamiljjj/
Twitter – https://twitter.com/jobstamiljjj