அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! சென்னையில் வேலை செய்திடலாம்!

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது காலியாக உள்ள 2 project Associate பணியிடங்களை நிரப்ப உள்ளது. இப்பணிக்கு தேவையான கல்வி தகுதியானது முதுகலை பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். நவம்பர் 29 தேதிக்குள் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணிசெய்ய சேர்க்கப்படுவார்கள்.

ALSO READ : 8773 காலிப்பணிகளை அறிவித்துள்ளது SBI வங்கி..! பேங்க் வேலை பாக்க நீங்க ரெடியா?

அண்ணா பல்கலைக்கழக பணிக்கு ஆப்லைன் மூலம் விண்ணபிக்கலாம். இப்பணிக்கான வயது வரம்பு 09/11/2023 தேதியின்படி அதிகபட்சமாக 35 வயதாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை. project Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாத சம்பளமாக ரூ.31,000/- பெற்றுக்கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரபூர்வ தளத்தில் தகவல்களை பெற்று விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க அஞ்சல் முகவரி கீழே தரப்பட்டுள்ளது.

அஞ்சல் முகவரி:

The Head,
Department Of Biotechnology,
Anna University,
Chennai- 600025.

மேலும் தகவல்களை பெற வேண்டும் என்பவர்கள் Official Notification பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்