கையில கரண்டியோட நிக்கும் நயன்தாராவோட அன்னபூரணி! ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

கையில கரண்டியோட நிக்கும் நயன்தாராவோட அன்னபூரணி! ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?
கையில கரண்டியோட நிக்கும் நயன்தாராவோட அன்னபூரணி! ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

தமிழ் சினிமாவுல முன்னணி நடிகையா வலம் வர்ரது யாரு சொன்னா… அது நம்ம லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாராவே தான். சமீபத்தில ஹிந்தி நடிகர் ஷாருக்கான் கூட ஜோடியா ஜவான் படத்தில நடிச்சாங்க. அந்த படம் பாக்ஸ் ஆபிசில 1000 கோடி ரூபாய வசூல் செஞ்சிருச்சி. அதுக்கடுத்து ஜெயம் ரவியோட இறைவன் படத்துலயும் நடிச்சாங்க.

இந்த நிலையில, புது டைரக்டர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்துல நயன்தாரா அவங்களோட 75வது படத்த நடிக்கிறார். அந்த படத்தோட டைட்டில அன்னபூரணி வெச்சி வீடியோ ஒண்ணு படக்குழு வெளியிட்டாங்க. இந்த படத்தில சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி இவெங்கெல்லாம் முக்கிய வேடத்தில நடிச்சிருக்காங்க. ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் சேர்ந்து தயாரிக்கிற இந்த படத்துக்கு தமன் மியூசிக் பண்ணுறாரு.

Also Read >> ஹாய் நான்னா படத்தின் 3வது பாடல் வெளியீடு! அப்டேட் கொடுத்த நானி படக்குழு…!

அன்னபூரணி படம் பத்தி போஸ்டர் ஒன்னு வெளியிட்டுக்காங்க. அதுல, டிசம்பர் மாசம் 1ஆம் தேதி அப்போ தியேட்டர்ல இந்த படம் ரிலீஸ் ஆகும்னு அறிவிச்சிருந்தாங்க.