வருமான வரித்துறையில் 17 பணியிடங்கள் அறிவிப்பு! உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

Announcement of 17 posts in Income Tax Department! Hurry and apply now central govt jobs
வருமான வரித்துறையில் 17 பணியிடங்கள் அறிவிப்பு

வருமான வரித்துறை அகில இந்திய அளவிலான துணை இயக்குனர், உதவி இயக்குனர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் டிசம்பர் 28 தேதிக்குள் ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். இயக்குனர் பணியில் 4, துணை இயக்குனர் பணியில் 7, உதவி இயக்குனர் பணியில் 6 என மொத்தம் 17 காலிபணியிடங்கள் இப்பணியில் உள்ளன. இந்திய முழுவதும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

ALSO READ : இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்! இந்தியா முழுவதும் வேலை செய்திட வாய்ப்பு!

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு Degree, B.E அல்லது B.Tech,முதுகலை பட்டம், M.Tech முடித்திருக்க வேண்டும். மேலும் இயக்குனர் பணிக்கு மாத சம்பளம் ரூ. 1,31,000 முதல் ரூ. 2,16,600 வரை வழங்கப்படும். துணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் பணிக்கு வருமான வரித்துறை விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் வயது அதிகபட்சமாக 56 ஆக இருக்க வேண்டும். Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களை கீழ் காணும் முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி:

Directorate Of Income Tax(Systems),
Central Board Of Direct Taxes,
Ground Floor, E2,ARA Center,
Jhandewalan Ext.,
New Delhi-110055

மேலும் விவரங்களுக்கு Official Notification மற்றும் Official Website தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்