டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 பற்றி மீண்டும் ஒரு புதிய தகவல்..!

Another new information about TNPSC Group-4

தமிழ்நாடு அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் குரூப் -4 தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை 7,381ல் இருந்து 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில், ஸ்டெனோ டைப்பிங் பிரிவில் மட்டும் மொத்தம் 2 ஆயிரத்து 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் 24ஆம் குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முடிவின் அடிப்படையில், ஸ்டெனோ டைப்பிங் பிரிவில் உள்ள 2,500 காலிப்பணியிடங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து இத்தனை பேர் தேர்வாகியிருப்பது அனைத்து தேர்வர்களுக்கும் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த குரூப்-4 முடிவுகள் வெளியாகி இதுவரை 2 வாரங்கள் கடந்த நிலையில், இதுமாதிரியான சந்தேகங்களுக்கு இதுவரை டிஎன்பிஎஸ்சியிடம் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படாததால் தேர்வர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN