ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் மறுவாய்ப்பு..! உடனே விண்ணப்பியுங்க..

Another opportunity to apply for JEE Main exam Apply Immediately

12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி படைப்பை முடித்தபிறகு, தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (என்.ஐ.டி), இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.ஐ.டி) மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) சேருவதற்காக என்.டி.ஏ. எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகிறது.

பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் இந்த ஜேஇஇ நுழைவுத்தேர்வானது இரு பிரிவுகளாக நடத்தப்படும். அவை, ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு ஆகியவையாகும். இதில் முதல் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இரண்டாவது தேர்வுக்கு நுழைய முடியும். இந்த ஜேஇஇ நுழைவு தேர்வானது தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 14 மொழிகளில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான முதல் கட்ட தேர்வானது நடந்து முடிந்த நிலையில், இதற்கான இரண்டாம் கட்ட தேர்வானது வருகிற ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளதால் முதல் கட்ட தேர்வான ஜேஇஇ மெயின் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 16 (நாளை) ஆம் தேதி இரவு 10.30 மணி வரை jeemain.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS IN JOBSTAMIL.IN