உலகச் சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் ஹங்கேரி தலைநகர் புடபெஸ்ட்டில் நடைபெற்றன. இதில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இவர் தனது இரண்டாவது முயற்சிலேயே 88 புள்ளி 17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அதன்பிறகு, இறுதிப் போட்டியில் ஒவ்வொரு வீரரும் தங்களது அனைத்து முயற்சிகளிலும் நீரஜின் இலக்கை எட்டிப் பிடிக்க முயன்றும் அது பலனளிக்கவில்லை.
இதனால், முதலிடம் பிடித்த நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்றில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். அதன்படி, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் வெள்ளியும், செக்குடியரசு வீரர் ஜேகப் வட்லெஜ் வெண்கலப் பதக்கத்தையும் வசப்படுத்தினர். மேலும், கடந்த உலகக் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றிருந்த நீரஜ், தற்போது தங்கத்தை உச்சி முகர்ந்துள்ளார்.