உலகம் முழுவதும் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் முக்கிய சமூக வலைதள செயலியாக டுவிட்டர் செயலி உள்ளது. டுவிட்டர் செயலியை அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த டுவிட்டர் செயலியை கடந்த ஆண்டு உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். இவர் டுவிட்டர் செயலியை வாங்கியது முதலே பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல் பல்வேறு அதிரடி நடவடிகையும் மேற்கொண்டார்.
முதலில், டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். டுவிட்டரில் அரிசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு ப்ளூ டிக்கை பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்பொழுது ப்ளூ டிக்கை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், டுவிட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றியுள்ளார்.
இந்நிலையில், தற்பொழுது மீண்டும் மிண்டும் ஒரு அதிரடி மாற்றத்தை எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதன்படி, இனி வரும் நாட்களில் டுவிட்டர்(எக்ஸ்) பயனாளர்கள் தங்களுக்கு பிடிக்காத அக்கவுண்ட்களை பிளாக் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு எக்ஸ் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.