சென்னை தலைமை செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை, ஆகஸ்ட் 24

தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள 161 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 21ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ (தமிழ்நாடு தலைமை செயலக பணி) பதவியில் அடங்கிய உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பதவியில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

அதாவது, தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் 74 இடங்கள், தலைமை செயலகம் (நிதித் துறை) உதவி பிரிவு அலுவலர் 29, தலைமை செயலகம் உதவியாளர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர) 49, தலைமை செயலகம் உதவியார் (நிதித்துறை) 9 இடங்கள் அடங்கும். இத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in வாயிலாக விண்ணப்பித்தல் நேற்று தொடங்கியது.

அடுத்த மாதம் 21ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் 26ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் 28ம் தேதி இரவு 11.59 மணி வரை இணையவழி விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நியமன அலுவலரிடம் இருந்து பெறப்படும் சான்றிதழ் மற்றும் தடையின்மை சான்றிதழ்களை டிசம்பர் 6ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் ஆகும்.

இந்த பதவிகளுக்கான எழுத்து தேர்வு டிசம்பர் 18ம் தேதி நடைபெறும். இத்தேர்வுக்கு தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சு பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர், இளநிலை உதவியாளர்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

SOURCE LINK


RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here