நம்ம சென்னை துறைமுகத்தில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு! மாத சம்பளம் 25,000 ரூபாய்..!

நம்ம சென்னை துறைமுகத்தில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை துறைமுகத்தில் வேலை

சென்னை துறைமுகத்தில் வேலை செய்ய வேண்டுமா? இதோ உங்களுக்கான அறிய வாய்ப்பு! இதில் உடற்கல்வி ஆசிரியர், கணக்காளர், உடல் இயக்குனர் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு chennaiport.gov.in என்ற அறிவிப்பில் வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30 ஜனவரி 2024 அன்று வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்து கொண்டு ஈஸியா சென்னையில் வேலையில் ஜாயின் பண்ணலாம்.

ALSO READ : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வாக்-ன்- இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! உடனே வேலையில சேருங்க!

சென்னை துறைமுகம் அறிவித்த இத்தகைய பணிக்கு விண்ணப்பதாரர்கள் Degree, Diploma, Masters Degree, B.Com ஆகிய படிப்பில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வித்தகுதி உடையவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். இதில் உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கு 1 பணியிடமும், கணக்காளர் பதவிக்கு 1 பணியிடமும், உடல் இயக்குனர் பதவிக்கு 1 பணியிடமும் என மூன்று பணியிடங்களை நிரப்ப உள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுடைய வயது அதிகபட்சமாக 45 வயது உடையவராக இருக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் சென்னை துறைமுகம் நேர்காணல் அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது. இதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் Physical Education Teacher, Accountant பணிக்கு 20,000 ரூபாய் வரை மாத ஊதியமும், Physical Director பணிக்கு 25,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

அப்ளிகேசன் பீஸ் இல்லை. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரியில் முழு பயோ-டேட்டா, தேவையான ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் முகவரி :

New Conference Hall,
Ground Floor,
Centenary Building,
Chennai Port Authority No.1,
Rajaji Salai,
Chennai-600001.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள சென்னை துறைமுகம் அறக்கட்டளையின் Official Notification & Application pdf கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top