மத்திய அரசு வேலையில் மொத்தம் 5696 காலி பணியிடங்கள்! மிஸ் பண்ணாம அப்ளை பண்ணிடுங்க!

மத்திய அரசு வேலையில் மொத்தம் 5696 காலி பணியிடங்கள்

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்( RRB) காலியாக உள்ள நிறைய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ரயில்வே வாரியத்தில் உதவி லோகோ பைலட்(ALP) பதவிக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். RRB-ன் இந்த வேலைக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். மத்திய அரசின் வேலைக்கு ஆன்லைனில் மட்டும் அப்ளை பண்ண முடியும்.

ALSO READ : நம்ம சென்னை துறைமுகத்தில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு! மாத சம்பளம் 25,000 ரூபாய்..!

  • ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் 5696 ALP வேலை காலியிடங்களுக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
  • RRB-யின் ஆட்சேர்ப்புக்கான கல்வி தகுதியானது 10th, ITI முடித்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்.
  • உதவி லோகோ பைலட் பணிக்கு தேவையான வயது 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities and Economically Backward Class (EBC) விண்ணப்பதாரர்களுக்கு 200 ரூபாய் கட்டணமும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் 500 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.
  • ALP வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு 19,900 ரூபாய் மாத ஊதியம் வழங்கப்படும்.
  • ரயில்வே வாரியத்தின் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் Certificate Verification முடித்தவுடன், Computer Based Test மூலம் தேர்வு தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசமாக 20/01/2024 முதல் 19/02/2024 வரை தரப்பட்டுள்ளது.

RRB ஆன்லைன் விண்ணப்பப்படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். அதிலிருந்து விண்ணப்பப் படிவத்தை பெற்று கவனமாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து ஆன்லைனில் அப்ளை பண்ணுங்கள்.

மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை பெற வேண்டுமென்றால் Official Notification & Official Website பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top