தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 685 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

புதிய அறிவிப்பு : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 685 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு அறிவித்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் சென்னை, மதுரை, கும்பகோணம், கோவை, நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட 8 இடங்களில் போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 6 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணி நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Also Read : ரேஷன் கார்டு வச்சிருக்கவங்களுக்கு வெளியான குட் நியூஸ்..! உடனே பாருங்க…

அதன்படி, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களுக்கு இன்று (ஆகஸ்ட் 18) முதல் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதில் விண்ணபிக்க விரும்புவர்கள் ww.arasubus.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apply for 685 Driver and Conductor Vacancies in Tamil Nadu Government Transport Corporations get job details and apply now

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நியமனம் செய்வதில் முற்றிலும் வெளிப்படை தன்மை இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், இந்த பணியிடங்கள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யப்படும் எனவும் இதில் தகுதிப்பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன்தேர்வு (செய்முறை) மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யபாடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.