ஆவின் நிறுவனத்துல வேலை! வாக்-இன் இன்டர்வியூக்கு ரெடி ஆகுங்க!

ஆவின் நிறுவனத்துல வேலை! வாக்-இன் இன்டர்வியூக்கு ரெடி ஆகுங்க

தமிழக அரசின் முக்கிய நிறுவனங்களில் ஆவினும் ஒன்று. அதில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு அருமையான வாய்ப்பு இது. திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் நிறுவனம் வேலைக்கான அறிவிப்பு தான் இது. திண்டுக்கல் ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் தான் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கான காலியிடமும் இரண்டே தான் உள்ளது.

ALSO READ : தெற்கு ரயில்வேயில் 2860 காலி பணியிடங்கள்! 10th, 12th,ITI படித்திருந்தாலே அப்ளை பண்ணலாம்!

இந்த வாய்ப்பை தவரவிடாமல் வாக்-இன் இன்டர்வியூக்கு செல்ல தயாராக இருங்க. BVSc படிப்பில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். Veterinary Consultant பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாத சம்பளம் 43,000 ரூபாய் வரையிலும் வழங்கப்படும். மேலும் ஆவின் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

தேர்வாகும் நபர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆவின் நிறுவனத்தில் பணி செய்திட வாய்ப்பு வழங்கப்படும். விண்ணப்பிக்க தேவையில்லை என்பதால் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதிகாரபூர்வ அறிவிப்பில் வயது பற்றி குறிப்பிடவில்லை. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆவின் நிறுவனத்தில் பிப்ரவரி 13, 2024 அன்று நடைபெறும் வாக்-இன் இன்டர்வியூவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் வாக்-இன் இன்டர்வியூ நடைபெறும் இடமான Dindigul District Co-operative Milk Producers Limited, No: 9 East Govindapuram, Dindigul-624001 என்ற முகவரிக்கு செல்லவும்.

மேற்கொண்டு விவரங்களை அறிந்துகொள்ள ஆவின் நிறுவனம் அறிவித்துள்ள Official Notification லிங்கை பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top