மத்திய அரசு வேலையில் 121 காலி பணியிடங்கள்! 12th படித்திருந்தால் அப்ளை பண்ணலாம்!

மத்திய அரசு வேலையில்  121 காலி பணியிடங்கள்

ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷனில்( SSC) அகில இந்திய அளவில் உதவியாளர், கிளார்க் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு இந்த பதவியில் 121 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த பணிக்கான அறிவிப்பிற்கு தகுதியுடைய நபர்கள் SSC அறிவித்துள்ள கால அவகாசம் முடிவதற்குள் ஆன்லைன் அல்லது ஆப்லைனில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கல்வித்தகுதி :

Assistant, Clerk பணிக்கு 12th தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் அப்ளை பண்ண தகுதியுடையவர்கள் ஆவார்.

வேலையிடம் :

ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷனில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரலாம்.

வயது வரம்பு :

பணியாளர் தேர்வாணைய ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும்.

காலி பணியிடம் :

Junior Secretariat Assistant/Lower Division Clerk பணியில் 52 காலியிடமும், Senior Secretariat Assistant/Upper Division Clerk பணியில் 69 காலியிடமும் உள்ளது.

ALSO READ : சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! உடனே ஆப்லைனில் விண்ணப்பியுங்கள்!

வயது தளர்வு :

பணியாளர் தேர்வாணையம் பணிக்கான வயது தளர்வும் அறிவித்துள்ளது.

PWD வேட்பாளர்கள் : 3 ஆண்டுகள்

SC, ST வேட்பாளர்கள் : 5 ஆண்டுகள்

PWD (SC/ ST) வேட்பாளர்கள் : 8 ஆண்டுகள்

விண்ணப்பக்கட்டணம் :

ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் பணிக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யும் முறை :

Computer Based Examination & Written Examination அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தேடுக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள் :

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி : 02.02.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 21.02.2024

மேலும் பணியாளர் தேர்வாணையத்தின் Junior Secretariat Assistant/Lower Division Clerk Official Notification லிங் மற்றும் Senior Secretariat Assistant/Upper Division Clerk Official Notification லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம் மற்றும் வேலை வாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top