நம்ம சென்னையிலே மத்திய அரசு வேலை வேண்டுமா? அப்ப வாக்-ன்-இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! உடனே வேலையில் சேர்ந்துடுங்க!

நம்ம சென்னையிலே மத்திய அரசு வேலை

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்(CLRI) இந்திய அரசினால் தோல் ஆராய்ச்சிக்காக நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும். CLRI உள்ள JRF, திட்ட உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை clri.org இல் வெளியிட்டுள்ளது. இந்த பதவியில் 5 பணியிடங்கள் மட்டும் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 19-ஜன-2024 அன்று வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம். Project Associate, JRF பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகமான சென்னையில் வேலை செய்யலாம்.

கல்வித்தகுதி :

CLRI அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.Sc, M.Sc, Post Graduation முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-01-2024 தேதியின்படி விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 28, அதிகபட்ச வயது 50 வயது உடையவராகவும் இருக்க வேண்டும்.

சம்பளம் :

Scientific Administrative Assistant – RS.18,000/- per month

Project Assistant – Rs.20,000/- per month

Project Associate-I – Rs.25,000/- per month

Junior Research Fellow – Rs.31,000/- per month

Senior Research Fellow – Rs.42,000/- per month

விண்ணப்பக்கட்டணம் :

நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்வதால் விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை :

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த பதவிகளுக்கு நேரடியாக Walk-In Interview
அட்டன் செய்தால் போதும் அதிலிருந்து பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சென்னையில் வேலை தேடும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோ- டேட்டா மற்றும் தேவையான ஆவணங்களுடன் கீழே தரப்பட்டுள்ள முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பை தெரிந்து கொள்ள Official Notification pdf க்ளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top