சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு மத்திய அரசின் புதிய வேலை வாய்ப்பு!

சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு மத்திய அரசின் புதிய வேலை வாய்ப்பு

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI) துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 60 காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் நிரப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. NHAI யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

ALSO READ : IIT மெட்ராஸ் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு வந்திருக்கு! 80,000 ஆயிரம் வரை சம்பளம் வாங்கலாம்!

  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணிபுரிய சிவில் இன்ஜினியரிங்(Degree in Civil Engineering) கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வேலை அறிவிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணியில் வைக்கப்படுவார்கள்.
  • Deputy Manager வேலைக்கு 30 வயதிற்கு அதிகமாகாமல் இருந்தால் மட்டும் இந்த பதவிக்கான அறிவிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • அதிகாரபூர்வ அறிவிப்பில் விண்ணப்பக்கட்டணம் இல்லை குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணிபுரிய மாத சம்பளம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை பெற்றுக்கொள்ளலாம்.
  • NHAI வேலைக்கு செலக்ட் ஆக எழுத்து தேர்வு இல்லை, Interview அட்டன் பண்ணால் போதுமானது. இதிலிருந்து தான் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
  • அப்ளை பண்ண ஜனவரி, 17, 2024 முதல் பிப்ரவரி 15, 2024 வரை டைம் தரப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து ஆன்லைனில் அப்ளை பண்ணுங்கள்.

மேலும் விவரங்களை அறிய NHAI Recruitment 2024 Notification என்ற லிங்கை கிளிக் செய்யவும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க apply online லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top