ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Engineering முடித்திருந்தால் வேலை! உடனே அப்ளை பண்ணிடுங்க!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Engineering முடித்திருந்தால் வேலை

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) வேலைக்கான அறிவிப்பை hal-india.co.in இல் வெளியிட்டுள்ளது. உதவிப் பொறியாளர்/ உதவி அதிகாரி பதவிக்கான ஒரு பணியிடத்தை நிரப்ப முடிவு செய்துள்ளது. இந்த வேலையில் சேரனும் ஆர்வம் இருக்கறவங்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த பணிக்கான முழு விவரங்களும் அதிகாரபூர்வ அறிவிப்பும் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ : ஆவின் நிறுவனத்துல வேலை! வாக்-இன் இன்டர்வியூக்கு ரெடி ஆகுங்க!

HAL இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பொறியியல்/தொழில்நுட்பத்தில் (Degree in Engineering/ Technology) பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பணிக்கு தேர்வாகும் நபர் உத்தரப் பிரதேசம் – லக்னோவில் வேலைக்கு சேரலாம்.

ஏரோநாட்டிக்ஸ் வேலைக்கு ஆர்வம் இருக்கா பிப்ரவரி 19, 2024 முடிவதற்குள் ஆப்லைனில் அப்ளை பண்ணிடுங்க. HAL ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28-02-2024 தேதியின்படி 45 வயதாக இருக்க வேண்டும். வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டும், SC,ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டும், PWBD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டும் ஆகும்.

Assistant Engineer/ Assistant Officer வேலைக்கான மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும் என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தனது அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது. தேர்வு செய்யும் முறை Written Test வைத்தும் Interview மூலமாக செலக்ட் செய்யப்படுவார்கள். அப்ளிகேசன் பீஸ் இல்லை.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி :

Chief Manager (HR),
Hindustan Aeronautics Limited,
Accessories Division,
HAL Post Office,
Ayodhya Road,
Lucknow (U.P.)-226016.

மேலும் வேலை வாய்ப்பு அறிவிப்பை பார்வையிட மற்றும் விண்ணப்பிக்க HAL Recruitment 2024 Official Notification & Application Form லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top